பர்கூர் அருகே அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலெலிதா அவர்களின் 77 வது வது பிறந்தநாள் விழா.
பர்கூர் சட்டமன்றத் தொகுதி மல்லப்பாடியில் தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலெலிதா பிறந்தநாள் விழா நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிகரலப்பள்ளியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு கவுன்சிலர் சங்கர் தலைமையில் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில்
சிறுபான்மையர் பிரிவு ஒன்றிய செயலாளர் பாரூக், கிளைச் செயலாளர் செல்வராஜ், பாடர் கணேசன், சண்முகம், சமிதா வீரப்பன், முரளி, ஞானசேகரன், ரமேஷ் பாபு, கோவிந்தசாமி, சிவக்குமார், பிரபு, குணசேகரன், பாபு, நாகேந்திரன், சுப்பிரமணி, செல்வராஜ், ஜெயபால், சக்திவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.