திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் IDE (Innovation, Design & Entrepreneurship) புத்தாக்க முகாம் நடைபெற்றது. முகாம் பங்கேற்பாளர்கள் மதுரை
MABIF (Madurai Agri Business Incubation Forum) மையத்திற்குக் தொழில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த வருகையின் போது, Er.K. கணேஷ் மூர்த்தி, தலைமை செயல் அதிகாரி, NABARD, MABIF, மதுரை அவர்களை சந்தித்து, முனைவுத் தொழில் வளாகத்தின் செயல்முறை குறித்து கலந்துரையாடினர். MABIF மையம், விவசாய மற்றும் உணவுத் தொழில்துறையில் தொழில்முனைவோர்களை ஊக்குவித்து, புதிய தொழில் முயற்சிகளை உருவாக்க வழிகாட்டும் முக்கிய அமைப்பாக செயல்படுகிறது.
மதுரை வேளாண்மை தொழில் முனைவோர் வளாகம் (MABIF) என்பது NABARD மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) ஒரு முனைவாகும். கடந்த 6 ஆண்டுகளாக, இது தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில்முனைவோருக்குப் பங்களிப்பு செய்து வருகிறது. MABIF இதுவரை 400+ தொடக்க நிறுவனங்களை வளர்த்துள்ளதுடன், 545+ விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOS) ஆதரித்துள்ளது. MSME, இந்திய அரசு ஆதரவில் செயல்படும் MABIF அறிவுசார் சொத்து வசதி மையம் (IPFC) மூலம் 135 வர்த்தக முத்திரைகள், 20 காப்புரிமைகள், 55 புவியியல் அடையாளப் பொருட்கள் பதிவுசெய்ய உதவியுள்ளது. இது விவசாயிகள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு அறிவுசார் சொத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த பயணத்தில் மாணவர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவில் உள்ள ஆசிரியர்கள், அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழில் சுற்றுப்பயணத்தின் மூலம், பங்கேற்பாளர்கள் தொழில்முனைவோர் வளர்ச்சி, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டனர்.