வேலூர் மாவட்டம், வேலூர் மேல்மொணவூர் பல்லவன் கல்வியியல் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் முன்னாள் கூடுதல் இயக்குனர் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சென்னை மற்றும் முன்னாள் முதல்வர் அரசு தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி வேலூர் பேராசிரியர் டாக்டர் எம். அருள்அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் . இந்நிகழ்ச்சியிலா பல்லவன் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ந. நரசிம்மன் வரவேற்புரையாற்றினார் . செயலாளர் ஆ .சுப்பிரமணியன், டி.சி. மணிலிங்கம், எ.பி.எஸ் .சுரேஷ் பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிலம்பம் ,நடனம், நாடகம் ,பேச்சுப்போட்டி ,பாட்டு போட்டி, ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இதனைத் தொடர்ந்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் சார்பில் சான்றிதழ் வழங்கினர். இதில் கமிட்டி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.



