ஈரோடு மே 21
ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி தேர் திருவிழா கடந்த 11 ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது 12 ம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் 13 ம் தேதி கோவிலின் கொடிமரத்தில் தேரோட்டத்திற்கான கொடி ஏற்றப்பட்டது
இதை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது வாருணாம்பிகை அம்பாள் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர் இதை தொடர்ந்து வாருணாம்பிகை அம்பாள் , விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளின் சப்பரங்கள் சென்றது இந்த தேரையும் சப்பரங்களையும் ஏராளமான பக்தர்கள் இழுத்து சென்றனர் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த தேர் மற்றும் சப்பரம் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அருகே வந்தது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட தேர் நேற்று மாலை மீண்டும் வடம் பிடித்து இழுக்கப்பட்டு கோவிலை அடைந்தது தொடர்ந்து நாளை மாலை சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடும் நாளை மறுநாள் மாலை வாருணாம்பிகை சமேத ஆருத்ரா கபாலீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது 23 ம் தேதி காலை சண்டிகேஸ்வரர் பூஜையும் பைரவர் யாகமும் நடக்க உள்ளது இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ஜெ. லலிதா அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் செல்வம் டாக்டர் சுந்தர்ராஜ் கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.