சிவகங்கை: பிப்:13
சிவகங்கை நகர் சுந்தரராஜப்பெருமாள் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 20 பேருக்கு இலவச திருமணமானது கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத், அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
இந்த திருமண விழா நிகழ்ச்சியானது
வருகின்ற 14.2.2025 அன்று நடைபெறுவதையடுத்து.
கூட்டுறவுத்துறை
அமைச்சரும் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் ஆலோசனையின் பேரில் சிவகங்கை சுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஆயத்தப்பணிகளை திமுக தலைமைப்பொதுக்குழு உறுப்பினர் அறங்காவலர் ஜெயமூர்த்தி, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ரம்யா தனசேகரன், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் காளையார்கோவில் வடக்கு ஒன்றியக்கழக துணைச்செயலாளர் கண்டிப்பட்டி வி. சி. கண்ணப்பன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
இதில் மாவட்ட திமுக தொழிலாரணி அமைப்பாளர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தனசேகரன், மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோவில் அறங்காவலர் தலைவர் மாணவரணி கார்த்திக், நகர்க்கழக நிர்வாகிகள் செம்புக்குட்டி தினேஷ், சந்தானம், இராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.