புதுக்கடை, பிப்- 11
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெரின் (35). கட்டிட காண்டிராக்டரான இவர் காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவராக உள்ளார். அதே பகுதி காளியான் விளையில் காங்கிரஸ் கட்சியின் கொடி ஒன்று கட்டப்பட்டிருந்தது.
சம்பவ தினம் அதே பகுதியை சேர்ந்த தயா (35) என்ற வர்க்ஷாப் தொழிலாளி காங்கிரஸ் கொடியை கிழித்து, தீயிட்டு எரித்து உள்ளார். தயா மீது நடவடிக்கை எடுக்க ஜெரின் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.