வேலூர் 07
வேலூர் மாவட்டம் கே வி,குப்பம் தாலுக்கா அலுவலகத்தில் தமிழகத்தில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், கருணை அடிப்படையில் வேலை உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் கீ.வ. குப்பம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டத் தலைவர் ருத்ரமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது
இதில் மாவட்ட இணை செயலாளர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் தனராஜ், வட்ட செயலாளர் சதீஷ்குமார், வட்டத் துணைத் தலைவர் கிரி, வட்டப் பொருளாளர் சிதம்பரம் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.