கலசலிங்கம் பல்கலைக்கழகம்:
ஓட்டுனர்களுக்கான மருத்துவ முகாம்
——+
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், நிலைத்த வளர்ச்சி மையம்-எஸ்டிஜி-8குழு
சார்பில், கலசலிங்கம் மருத்துவமனையில் போக்குவரத்து ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு ஒரு நாள் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தது. வேந்தர். முனைவர். கே.ஸ்ரீதரன் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ இயக்குனர் டாக்டர் ஜேம்ஸ் பாண்டியன், இயக்குனர், பி தீபலட்சுமி, .முத்துலட்சுமி .எஸ்.சிவசுப்ரமணியம், கலசலிங்கம் செவிலியர்பள்ளி, தங்கசுப்புலக்ஷ்மி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நர்சிங் மாணவர்கள் நாடக நடிப்பு மூலம் உடல் நலத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சி நடத்தினர். 1O0 ஓட்டுநர்கள் , நடத்துனர்கள் கலந்து கொண்டுபயனடைந்தனர். இரத்த சர்க்கரை அளவு சோதனை, இரத்த அழுத்த சோதனை, கண் பரிசோதனை மற்றும் ஒட்டுமொத்த மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. எஸ்டிஜி – இன்சார்ஜ் , ஹெச்.ஆர். எஸ். குந்தவை வரவேற்று நன்றி கூறினார்.



