வேலூர் 05
வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காட்பாடி சன்பீம் மெட்ரிக்பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுலவர் திருமதி செ.மணிமொழி, காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பழனி, வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. சுந்தரராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. ராஜேஷ் கண்ணன், காட்பாடி வட்டாட்சியர் திரு. ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.