அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாணவரணி செயலாளர்கள் முகமது இப்ராகிம் ஜாபர் அலி, சுதாகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நகரச் செயலாளர்கள் பாஸ்கர், சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வைகைசெல்வன், முன்னாள் எம்எல்ஏ வைரமுத்து, மாணவரணி இணை செயலாளர் கண்ணன், வக்கீல் பிரிவு இணை செயலாளர் முருகவேல், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா, குழிபிறை பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.