சாத்தூர் டவுன் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நடைபெற்ற இன் நிகழ்வில் சாத்தூர் டவுன் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கண்ணின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



