சேலம் தாதகாப்பட்டி கேட் ஸ்ரீ ராஜ காளியம்மன் ஆலயத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டு அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மனுக்கு பூ சாட்டுதல் நிகழ்வு நடைபெற்றன. மேலும் ஆலய திருவிழா நிகழ்ச்சிகள் 23.1.25 முதல் 09.2.2025 வரை தினசரி நிகழ்ச்சிகள் அம்மனுக்கு தினசரி சிறப்பு பூஜைகள்,கொடியேற்று விழா,அம்மன் திருவீதி உலா, மகளிர் அணியினர் பால்குட ஊர்வலம்,திருக்கோவில் கமிட்டியார்கள் சார்பாக ஸ்ரீ ராஜகாளியம்மன் சாவாரம் திருவீதி உலா, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா,போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலய நிர்வாக கமிட்டியர்கள் திருவாளர்கள் தலைவர் கேட் சேகர், செயலாளர் கோபால் பொருளாளர் ஜெயக்கொடி, வாலீஸ்வரன், சண்முகம்,கோவிந்தசாமி,செல்வகுமார் ஆகியோர் தெரிவித்தனர். மேலும் பிரதி மாதம் அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினத்தன்று மாலை 6:00 மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிரதோஷ தினத்தில் மாலை நான்கு முப்பது முதல் ஆறு மணி வரை அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.



