ஜன:23
திமுக மாநில மகளிர் அணி செயலாளர் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என போராடிய சமூக நீதி போராளி பெரியார் கண்ட கனவை நினைவாக்கி வாழும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவினை வடக்கு மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் துவக்கி வைத்தார். விழாவின் முதல் விழாவாக விஜயபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு பேனா மற்றும் இனிப்புகள் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திருமதி ஆனந்தி ஏற்பாடில் வழங்கப்பட்டது .
2 வது நிகழ்ச்சியாக காதர் பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 250 குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் இனிப்புகள் மகளிர் அணி அமைப்பாளர் திருமதி கலைச்செல்வி அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்றது.
3=வது நிகழ்ச்சியாக பெரியார் காலனியில் உள்ள அரசு பள்ளியில் மாநகர மகளிர் அமைப்பாளர் திருமதி கௌரி மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமா மகேஸ்வரி கருணாநிதி ஏற்பாட்டில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கின்னம் மற்றும் டிப்பன் பாக்ஸ் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி .கே டி.மு. நாகராஜ். வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் தினேஷ்குமார். தெற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாலதி நாகராஜ்.மாவட்ட துணை செயலாளர் வக்கீல் குமார்.வக்கீல் நந்தினி டிஜிட்டல் சேகர்.மாநில மகளிர் பிரச்சார அணி செயலாளர் உமா மகேஸ்வரி.பகுதி கழகச் செயலாளர்கள் மேங்கோ பழனிச்சாமி.மு க.உசேன். மியாமி அய்யப்பன். ராமதாஸ்.மின்னல் நாகராஜ்.1.வது மண்டல தலைவர் திருமதி உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம். மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி. விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ரத்தினசாமி.கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன்.திவாகரன்.ஜெயசுதா பூபதி. பிரேமலதா கோட்டா பாலு.அனுசுயா தேவி சண்முகசுந்தரம். கழக வார்டு செயலாளர்கள் வெங்கட்ராஜா. மகேந்திரன் ஸ்ரீதர்.குட்டிகுமார்.அய்யம்பெருமாள் செந்தில்குமார். சண்முகசுந்தரம். எல் பி எஃப் மாவட்ட தலைவர் பி எஸ் பாண்டியன். தெற்கு மாநகர விவசாயி அமைப்பாளர் வி பி மகேந்திரன்.
சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜான் வர்தாரிஸ்.வடக்கு மாநகர விவசாய அணி அமைப்பாளர் ஆறுச்சாமி. உள்ளிட்ட திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மாநகர நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.