பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பள்ளி குழந்தைகள், சாலையை சீரமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கெரிகெப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட கவுத்துக்காரன் கொட்டாய் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாக அப்பகுகிராம மக்கள் மனம் உடைந்து வேதனையில் மாவட்ட நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்போது அவர்கள் தெரிவித்தது, சுமார் 60 குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றோம், எங்கள் ஊரில்
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது, அந்த சாலையில் நாள்தோறும் காலை மாலை என பால் ஊற்ற குண்டும் குழியுமாக உள்ள சாலையில் போகும் போது பால்கேனில் பால் கசிந்து பாதியாக குறைத்து விடுகிறது, சிலசமயங்களில் வாகனத்தில் இருந்து பால்கேன் விழுந்து விடுகிறது, ஜல்லி பெரட்டிவிட்டு வாகனத்துடன் கீழே விழுந்தது விபத்துக்குள்ளாவது மட்டுமின்றி பள்ளி குழந்தைகள் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்லும்போது கீழே விழுந்தது தவிர்ப்பதும் தொடர்கதையாக உள்ளது, மேலும் மாலை 6 மணிக்கு மேல் தெருவிளக்கு இல்லாமல் கிராமமே (காடாக ) வனப்பகுதி போல் உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் வெளியே வர முடியாத கைதியாக உள்ளோம் என மனம் உடைந்து குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை புதுப்பித்தும், இருளில் உள்ள கிராமத்தில் ஒழியேற்ற தெருவிளக்கு அமைத்து தர வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.