மதுரை ஜனவரி 16,
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்கும் போது மாடுமுட்டி உயிரிழந்த விளாங்குடி 20 வது வார்டை சேர்ந்த 23 வயதுடைய நவீன் குமாருக்கு இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் விளாங்குடி பொதுமக்கள் அனைவரும் பிரேதத்தை (உடலை) மதுரை இராசாசி மருத்துவமனையில் இருந்து வாங்க மறுத்து விட்டனர். இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு பத்து லட்ச ரூபாய் நிதி வழங்க வேண்டும். மேலும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து மதுரை விளாங்குடி மெயின் ரோட்டில் காலவரையற்ற அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் மதுரை மேற்கு ஆறாம் பகுதி கழக செயலாளர்
விளாங்குடி KR.சித்தன் பங்கேற்றுள்ளார்.