மதுரை மாவட்டம் அழகர் மலையில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு அழகர் மலை உச்சியில் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இதில் முன்னதாக சுவாமிக்கு சண்முகா அர்ச்சனையும் யாகசாலை பூஜைகளும் மகா அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து அன்ன வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க தீவட்டி பரிகாரம்களுடன் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சஷ்டி மண்டபத்தில் அமர்ந்து காப்பு கட்டி விரதங்களை தொடங்கினர் இதில் வருகிற ஏழாம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நடைபெறுகிறது 8 ந் தேதி திருக்கல்யாணம் காலை நடைபெறவுள்ளது.



