களியக்காவிளை, ஜன. 17 –
களியக்காவிளை அருகே குந்நம்விளாகம் சிவபுரத்தில் அழிக்கால் ஆதி சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 2026-ம் ஆண்டு திருவிழா ஜனவரி 11-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் நாள் விழாவில் மஹா கணபதி ஹோமம், திருக்கொடி மரம் ஊர்வலம் , திருக்கொடியேற்றுதல், புஷ்பாபிஷேகம், சமய மாநாடு நடந்தது. ஏழாம் திருவிழாவான இன்று காலை பூஜை, சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி மற்றும் மஹா தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து வில்லிசை பாட்டு திருக்கொடியிறக்குதலுடன் இவ்வருட திருவிழா நிறைவடை ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



