சுசீந்திரம் ஜன 12
நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டிபொட்டல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன் வயது 45 இன்னும் திருமணம் ஆகவில்லை. மர ஆசாரி செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் என்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தவர் அப்பகுதியில் உள்ள ஒரு மாமரத்தில் லுங்கியால் தூக்கு போட்டு இறந்து போனார். இது குறித்து அவரது தாயார் அன்னலெட்சுமி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


