கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காலை 7.30 மணிக்கு ஊத்தங்கரை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மாணவர்கள் சமூக விழிப்புணர்வுப் பேரணி, விவசாயம், போதைப் பொருட்களைத் தவிர்த்தல், பெண்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் கோசங்களை எழுப்பி நகரம் முழுவதும் ஊர்வலம் வந்தனர், முன்னதாக ஊர்வலத்தை ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளர் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் புதுப்பானை பொங்கல்லிட்டு இறைவனை வழிபட்டு விழா துவங்கியது. வித்யா விகாஸ் கல்வி அறகட்டளையின் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பல நல்ல கருத்துகளை வழங்கிச் சிறப்பித்தார், முனைவர் தமிழ்மகன் இளங்கோ பொங்கல் குறித்தும் மாணவர்களின் நடத்தைகள் மற்றும் தமிழ் பாரம்பரியம் குறித்து சிறப்புரையாற்றினார். ஏராளமான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஊரின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். பள்ளியின் தாளாளர் சக்திவேல் வரவேற்புரையாற்றினார், பள்ளியின் செயலாளர் சிற்றரசு, துணைத்தலைவர் முல்லை சக்திவேல், நிர்வாக அலுவலர் சஞ்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், பாரதிய கலைக் குழுவினர்கள் பாரம்பரிய கலை நிகழ்சிகளும் எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்தன. முதல்வர் துணைமுதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.



