ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில்,
வத்திராயிருப்பு ஒன்றிய, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில்
ஒன்று முதல் ஐந்து வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 6–9, நான்கு நாட்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகேசன், சீனிவாசன் ஆகியோரின் தலைமை
யில் நடைபெற்றது.
மாணவர்கள் புரிந்து வாசித்தல், சொந்த நடையில் பேசுதல், எழுதுதல், வாழ்வியல் திறன்கள் , வாழ்க்கைக் கணக்குகள் செய்தல் போன்ற திறன்களை வளர்க்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் 1-3 வகுப்பு கற்பிக்கும் 115 ஆசிரியர்களும்,
4-5 வகுப்பு கற்பிக்கும் 100 ஆசிரியர்களும் கலந்து கொண்டுபயனடைந்தனர் .
பயிற்சிகளை, விருதுநகர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் மூர்த்தி பார்வையிட்டார்.
“ஆசிரியர்கள் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து, கருத்துக்களை பகிர்ந்து கொண்டு, வகுப்புகளில் செயல்படுத்த வேண்டும். மாணவர்களின் மதிப்பீடு சரியாக செய்யப்பட வேண்டும் “என்று கூறினார்.
மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கநிலை) செந்தில்குமார் பயிற்சி யைப் பார்வையிட்டு,
ஆசிரியர்கள் முன்மாதிரியாக செயல்பட்டு மாணவர்களை வழி நடத்த வேண்டும் என்றார் .
பயிற்சிக்கான ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோரின் வழிகாட்டலின் படி வட்டார வளமைய மேற்பார்வை
யாளர் (பொறுப்பு) கணேஷ்வரி சிறப்பாக செய்திருந்தார்.