திருப்பத்தூர்:ஜன:03, திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்ககம், மாவட்ட மைய நூலகம் இணைந்து பொய்யாமொழிப் புலவர் திருவுருவச் சிலை நிறைவு வெள்ளி விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் (பொ) லூ.கிளமெண்ட் தலைமை தாங்கினார்.
மாவட்ட மைய நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகர் அர. எழிலரசன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புன்னியக்கோட்டி, மேனன் பேராசிரியர் ரத்தின நடராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி, வாசகர் வட்ட தலைவர் அட்சயா கா.முருகன், கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் சீனிவாசன், முன்னாள் தமிழ் ஆசிரியர் சீனிவாசன், பேராசிரியர் உமா, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ரஜினி, திரைப்பட நடிகர் கவிஞர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார்கள்.
திருக்குறள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் அருணாச்சலம் சான்றிதழும் ரூ. 5000 பரிசு தொகையும், இரண்டாம் பரிசு மகேஷ்வரன் சான்றிதழும் ரூ.3000 தொகையும், மூன்றாம் பரிசு தீபிகா சான்றிதழும் ரூ.2000 தொகையும், திருக்குறள் பேச்சுப் போட்டியில் முதலிடத்தை பிடித்த மாணவன் மகேஷ் சான்றிதழும் ரூ.5000 தொகையும், இரண்டாம் பரிசு சஞ்சய் குமார் சான்றிதழும் ரூ.3000 தொகையும், மூன்றாம் பரிசு மாணவி தமிழரசி சான்றிதழும் ரூ.2000 தொகையும், மனனப் போட்டியில் முதல் பரிசு கவியரசு சான்றிதழும் ரூ.5000 ரூபாயும், இரண்டாம் பரிசு மீனாட்சி சான்றிதழும் ரூ 3000 தொகையும், மூன்றாம் பரிசு யோபிகா ஸ்ரீ சான்றிதழும் ரூ.2000 ரூபாயும் சிறப்பு விருந்தினர்களால் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பொம்மி குப்பம் ஊராட்சியில் நூலக கட்டிடம் கட்டுவதற்கு ஊர் பொதுமக்கள் சார்பாக ரூ.20000/ தொகையினை வாசகர் வட்டம், சமூக ஆர்வலர் மாவட்ட நூலகரிடம் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தமிழாசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.