திருவாரூர் டிசம்பர் 31
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, பத்திரிக்கையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையினை இறந்த பத்திரிக்கையாளரின் வாரிசுதாருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் வழங்கினார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றிய செய்தியாளர் கு.ரமேஷ் பணியில் இருக்கும் போது 04.07.2023 அன்று இறந்து விட்டதால் அவரது மனைவியும், வாரிசுதாரருமான கு.கல்யாணிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, பத்திரிக்கையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் அவர்கள் உடனிருந்தார்.