By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2ம் போக நெல் நடவு பணிகளில் விவசாயிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > 2ம் போக நெல் நடவு பணிகளில் விவசாயிகள்
கிருஷ்ணகிரிமாவட்டம்

2ம் போக நெல் நடவு பணிகளில் விவசாயிகள்

Last updated: December 26, 2024 11:24 am
December 26, 2024
75 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளான பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், சின்னப்பாரவூர் ஓடமங்கலம், புலியூர், ஜம்புகுட்டப்பட்டி புங்கம் பட்டி செல்லக்குடப்பட்டி மற்றும் தென்பெண்ணை ஆற்று படுகைகளி்ல் 2-ம் போக நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.பி. அணை மூலம் 9,012 ஏக்கர் பரப்பளவும் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் டிசம்பர் வரை, முதல்போகப் பாசனத்துக்கும், ஜனவரி முதல் மே மாதம் வரை 2-ம் போகப் பாசனத்துக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நிகழாண்டில் கடந்த நவம்பர் மாதத்தில் அறுவடை முடித்த விவசாயிகள் மழை மற்றும் அணைகளின் நீர் திறப்பை நம்பி எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், பாரூர் ஏரியிலிருந்து 2-ம் போகப் பாசனத்துக்காக கடந்த டிசம்பர் 13-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் மூலம் நேரடியாக 2397 ஏக்கர் பரப்பளவும், மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவும் பயன்பெறுகிறது. தற்போது, விவசாயிகள் நெல் நடவு, நிலத்தைச் சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நிகழாண்டில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாமல் இருந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், 2-ம் போக நெல் சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. மேலும் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ள காரணத்தால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சுமார் 1000 ஏக்கருக்கும் மேல் கூடுதலாக சாகுபடி செய்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
இலவச கண் சிகிச்சை முகாம்
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 51 விசைப்படகுகள்
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் இலவச திருமணம்
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆம்புலன்ஸ் சேவை முடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் எழுச்சி நாள் விழா

December 2, 2024
67 Views
ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி
முள்ளூர்துறையில் காம்பவுண்ட் சுவர் இடிப்பு: 34 பேர் மீது வழக்கு பதிவு
விளாத்திகுளத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ வழக்கில் சிலம்பம் பயிற்சியாளர் கைது
மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account