மதுரை டிசம்பர் 20,
மதுரை மாநகராட்சி சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகராட்சி கமிஷ்னர் அதிரடி உத்தரவு
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாங்கள் வளர்க்கும் மாடுகள் தெருக்கள், சாலைகளில் கொண்டியாக சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்து வருவதோடு தேவையற்ற வீண் கழிவுகளையும் செரிமானம் ஆகாத பொருட்களையும் சாலையோரப் பகுதிகளில் கிடக்கும் பொருட்களை உணவாக எடுத்துக்கொள்கிறது.
கால்நடைகளுக்கு உணவு வசதி போதிய அளவில் வழங்காததாலும் இருப்பிட மாட்டு கொட்டகை வசதிகள் அனைத்தும் செய்யப்படாமல் இருந்து வருவதே முக்கிய காரணமாகும். மேலும் விலங்குகள் வதை தடுப்பு சட்டம் உரிமையாளர் மீது தண்டனை நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி கால்நடைகள் சாலைகள் மற்றும் தெருக்களில் அதிகமாக காணப்படுகிறது. பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்க வகையில் மாட்டின் உரிமையாளர்களே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவது தெரியவருகிறது. எனவே, மாடுகள் வளர்ப்போர் தங்கள் மாடுகளை தங்களுக்கு சொந்தமான இடங்களில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டி தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாடுகள் சாலையோரம் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்தால் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு அபராதம் விதித்து ஏலத்திற்கு விடப்படும். எக்காரணத்தை கொண்டும் உரிமையாளர்கள் வசம் மாடுகள் திரும்பி தரப்பட மாட்டாது.
பொது சுகாதார சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்கள் மற்றும் சாலைகளில் திரியும் மாடுகளை தனியார் நிறுவனம் மாடிபிடி வீரர்கள் மூலமாக பிடிக்கப்பட்டு மாடுகள் மாநகராட்சி கால்நடை காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். பிடிக்கப்பட்ட மாடுகளை 7 நாட்களுக்கும் அதிகமாக மாட்டின் உரிமையாளர் உரிமை கோரப்படாத நிலையில் (18.12.2024 அன்று) 9 மாடுகள் கோசாலாவிற்கு கொண்டு சென்று ஒப்படைப்பு செய்யப்பட்டது. எனவே மாட்டின் உரிமையாளர்கள் சாலைகள் மற்றும் தெருக்களில் கால்நடைகளை திரிய விடாமல் பாதுகாப்பாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்