தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக திண்டுக்கல்லில் 7 – வது மாவட்ட மாநாடு நிகழ்ச்சி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்
சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் இர.சரவணன் தலைமை தாங்கி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து தலைமை உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சு.சக்தி வடிவேல் முருகன் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாநில பொது செயற்குழு உறுப்பினர்
சி. அருண்பிரசாத் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் இரா.மகுடபதி செயலாளர் அறிக்கைகளை வாசித்தார்.மாவட்ட பொருளாளர் இர.எழில்வளவன் வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். மாநில செயலாளர் ச.ராஜசேகரன் கலந்து கொண்டு துவக்கி உரையாற்றினார். இதில் மாநில தலைவர் எஸ்.ராம மூர்த்தி அறிக்கை மீதான விவாத தொகுப்புரையை ஆற்றினார். இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆ.ஆரோக்கிய ஜார்ஜ் , உ.முருகன், மு.பா.முருகானந்தம், மாவட்ட இணை செயலாளர்கள் என். மோகன்,இரா. சுமதி, ப.சடையாண்டி, த.ராஜ்மோகன், மாவட்ட தணிக்கையாளர்கள் ம.கவிதா, மு.அனுராதா
உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ச.பாரி கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து நிறைவுரை ஆற்றினார்.இந்த மாநாட்டின் போது தீர்மானங்களான ஊரகவளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளை பிரித்து புதிய ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளை உருவாக்க வேண்டும். பழனி, கொடைக்கானல் ஒன்றியங்களில் சுற்றுலா தலங்கள் இருப்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் வரவேற்பு அலுவலர் நியமிக்க வேண்டும்.அதே
போல் திண்டுக்கல் ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது. காலி பணியிடங்களில் 25 சதவீதத்தை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உணவு உண்ணும் அறை, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர்
இர.எழில் வளவன் நன்றியுரை ஆற்றினார்.



