கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், இந்திய தரநிர்ணய அமைவனம், பெங்களூரு கிளை நடத்தும் கிராம பஞ்சாயத்து அளவில் இந்திய தரநிலைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி (நிர்வாகம்) மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா ஆகியோர் தலைமையில் (04.12.2024) அன்று நடைபெற்றது .
இந்திய தரநிர்ணய அமைவனம், முன்னாள் இயக்குநர் தாமரை செல்வன் பயிற்சியில் தெரிவித்ததாவது, இந்திய தரநிர்ணயம் தற்போது பொருட்களுக்கான தரத்தை முறைப்படுத்துதல், பொருட்களுக்கான ISI தரச்சான்றிதழ் வழங்குதல், ISO தரச்சான்றிதழ் வழங்குதல், ஆய்வகத்தில் பொருட்களுக்கான தரத்தை உறுதி செய்தல், தங்க நகைகளுக்கான HALL MARKING தரச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் தங்கத்தின் தூய்மை தன்மையை உறுதிப்படுத்துதல், வெளிநாட்டு தயாரிப்புகளுக்கான தரச்சான்றிதழ் சேவை வழங்குதல், மின்னணு மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கான BIS தரச்சான்றிதழ்களுடன் கூடிய கட்டாய பதிவு சான்றிதழ்கள் மற்றும் BIS CARE செயலின் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கிராம பஞ்சாயத்து அளவில் பொருட்கள் வாங்கும் பொழுது அரசு இ-சந்தையில் ISI தரச்சான்றிதழ் மற்றும் கட்டாய சான்றிதழ் ஆகியவை உள்ளதா என்பதை பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும், தற்போது 723 பொருட்களுக்கு அரசு தரப்பில் BIS கட்டாய தரச்சான்றிதழ் தேவை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர், தலைகவசம், சிமெண்ட, குக்கர், விளையாட்டு பொம்மைகள், காலணிகள், வாகனங்களின் டயர்கள், பால் பவுடர் போன்ற பொருட்களுக்கு கட்டாய தரச்சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. தரக்குறைபாடு உள்ள பொருட்கள் பற்றி புகார்களை BIS CARE செயலின் உதவியோடு எளிதில் பதிவு செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரதிற்குட்பட்ட 36 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் ஆறுமுகம், கல்பனா – வட்டார வள பயிற்சியாளர்கள், , மகேஷ், வெங்கடேசன், மற்றும் சூரியகுமார் கலந்து கொண்டனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கிராம பஞ்சாயத்து தேவையான பொருட்கள், செயல்முறைகள் மற்றும் சேவைகளின் தரத்தை வரையறுத்து தீர்மானிக்கும் பொறுப்பு BIS க்கு உள்ளது. பொருட்கள், செயல்முறைகள் மற்றும் சேவைகளுக்கான தரநிலைகளை உருவாக்குவதன் மூலம் BIS இதைச் செய்கிறது.
இந்திய அரசாங்கம் கட்டாயச் சான்றிதழின் கீழ் சுமார் 723 க்கும் மேற்பட்ட பொருட்களை அறிவித்துள்ளது. இந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் BISயிடம் இருந்து கட்டாயமாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ISI முத்திரை இல்லாமல் இந்த பொருட்களை விற்கவோ, சேமிக்கவோ, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவோ இயலாது, இந்த தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை வாங்கும் போது BIS தரக் குறி மற்றும் CM/L எண்ணை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
இரண்டு இயற்கையான கேள்விகள் எழுகின்றன ஒரு தயாரிப்பு கட்டாயச் சான்றிதழின் கீழ் உள்ளதா என்பதை எப்படி அறிவது மற்றும் CM/L எண் உண்மையானதா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?
BIS Care செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஃபோன்கள் இரண்டிலும் பதிவிறக்கம் செய்யலாம், இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம், கட்டாயச் சான்றிதழின் கீழ் உள்ள பொருட்களின் முழுமையான பட்டியலைக் காணலாம், மேலும் இந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்ட இடத்தில் உள்ள எண்ணைத் தட்டச்சு செய்வதன் மூலம் CM/L எண்ணின் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம். CM/L எண் தவறானது என கண்டறியப்பட்டால், இந்த செயலியைப் பயன்படுத்தி ஒருவர் புகார் அளிக்கலாம்.
கட்டாயச் சான்றிதழின் கீழ் இல்லாத மற்ற பொருட்களும் கூட, BIS ஆல் சான்றளிக்கப்பட்டிருந்தால் அவற்றைப் பெற்று பயன்படுத்துவது சிறந்தது. உற்பத்தியாளர்கள் BIS-யில் உரிமம் பெறுவது மிகவும் எளிமையானதாகும்.
BIS சான்றளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் HUID கொண்டுள்ள தங்க நகைகளை பயன்படுத்துவதைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்ற பொருட்களைப் போலவே, ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை BIS Care appல் இதற்காக வழங்கப்பட்டுள்ள இடத்தில் HUID எண்ணை இடுவதன் மூலம் சரிபார்க்கலாம். BIS Care செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த, மேலும் பலரை ஊக்குவிக்கவும்.
நீங்கள் BIS இணையதளத்தை (www.bls.gov.in) மிகவும் பயனுள்ளதாகவும், தகவல் தருவதாகவும் காணலாம். மேலும் தரநிலைகள் பற்றிய எந்த தகவலுக்கும் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.