கன்னியாகுமரி மே 6
கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்ட இருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த கடல் சீற்றமும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள பொழிக்கரை கடற்கரை கிராமத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கடல் சீற்றம் இருந்து வருவதால் கடல் நீர் ஊருக்குள் புகுழ்ந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை அவர்கள் வந்து பார்க்கவில்லை என்ற வேதனையும் மீனவ மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிராமத்தை பொறுத்த வரைக்கும் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக அரசாணை வெளியிட்டு அந்த அரசாணை அப்படியே கிடப்பில் உள்ளது இதுவரை நிறைவேற்றப்படவில்லை அதேபோன்று அரசால் கட்டித் தரப்பட்டுள்ள இரண்டு தூண்டி வளைவுகளும் குறுகிய அளவில் கட்டியுள்ளதால் இந்த கடல் நீர் ஊருக்குள்ள புகுந்து வருவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து படகுகள், வீட்டு பொருட்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவை அனைத்தும் சேதமடைந்துள்ளது. எனவே அரசு உடனடியாக நிவாரணமும் வழங்க வேண்டும் 150 மீட்டர் நீளத்தில் 120 மீட்டர் நிலத்தில் தடுப்புச் சுவர் கட்டி தர வேண்டும் குறுகிய தூண்டில் விளைவை நீட்டித்து தர வேண்டும் அப்போதுதான் இந்த கடற்கரை கிராமத்துக்கு மக்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என பங்குத்தந்தை ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார்.