நாகர்கோவில் அக் 31
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டப அருகில் உள்ள முக்கோண பூங்காவில் மகளிர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வணிக அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா நேற்று நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களை சந்தைபடுத்திட பல்வேறு நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருப்பகண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்படுகிறது.
மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்வதற்காகவும் குழுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அப்பொருள்கள் அனைத்து தரப்பு மக்களுக்கு சென்றடையும் நோக்கில் தமிழ்நாடு அரசு மகளிர் திட்ட மூலமாக இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்த விற்பனை கண்காட்சியில் 25 கடைகள் மற்றும் 48 மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களான சணல் பொருள்கள், துணிபைகள், ஆயத்த ஆடைகள், சிறுதானிய உணவு பொருள்கள், தின் பண்டங்கள். சங்குபொருள்கள். தேன், ஜூஸ் வகைள். ஊறுகாய் வகைகள் போன்ற பொருள்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விற்பனை கண்காட்சி கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபம் எதிரில் உள்ள மைதானத்தில் 29.10.2024 முதல் 04.11.2024 முடிய விற்பனை கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சியினை பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர்தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர்திட்ட இயக்குநர் சா.பத்ஹூ முகம்மது நசீர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க
மேலாளர் தங்கராஜ், மகளிர் திட்ட அலுவலக பணியாளர்கள், சுய உதவிக்குழு
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.