பள்ளிக்கல்வித்துறை நடத்தும் 65-ஆவது குடியரசு தின தடகள போட்டிகள் ஈரோடு மாவட்டத்தில் 6 ந் தேதி முதல் முதல் 8 ந் தேதி வரை மாணவிகளுக்கும் 9 ந் தேதி முதல் 11 ந் தேதி வரை மாணவர்களுக்கும் நடைபெறுகிறது இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனீஷ் பிரகாஷ் எம் பி உட்பட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .



