ஈரோடு அக் 13
ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது இந்த கோவிலின் தேர் திருவிழா நிகழ்ச்சி கடந்த ஐந்தாம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது தொடர்ந்து தினமும் காலையில் யாகசாலை பூஜைகள் திருஞ்சனம் நடந்தது
ஸ்ரீதேவி பூதேவியுடன் கஸ்தூரி அரங்குக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதன் பிறகு தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாளை மாலை கோவிலின் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெ .லலிதா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.