ஈரோடு அக் 13
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நல சங்கங்களின் கூட்டமைப்பு மாநில கூட்டம் ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது .மாநிலத் தலைவர் ராஜரத்தினம் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் மாநில மகளிர் அணி செயலாளர் இளையரசி வரவேற்றார். நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஏ.ஜி. வெங்கடாசலம் சி.கே சரஸ்வதி மற்றும் சிவானந்தன் நடராஜன், டாக்டர் அருள் நாகலிங்கம், செந்தில் ராஜா, ரவி ஆடிட்டர் மனோகரன் வாழ்த்துரை வழங்கி விருது வழங்கினர். டாக்டர் குமரேசன் பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் இதில் கலந்துகொண்டு பேசினர் சங்கத்தின் மாநில துணை செயலாளர்கள் அங்குசாமி, குமரேசன், மாநில மகளிர் அணி தலைவர் சித்ரா, பொருளாளர் பொற்கொடி, துணை தலைவி திலகா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மாநில பொருளாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணியன் உட்பட. பலர் இதில் கலந்து கொண்டனர் முடிவில் மாநில செயலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை சிறப்பு தேர்வு மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் மற்ற மாநிலங்களில் உள்ளது போல தமிழகத்தில் 100% உடல் குறைபாடு கொண்ட மாற்றத்திறனாளிகளின் மாத பராமரிப்பு உதவித்தொகை ரூ. 2000 த்தில் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் மாத பராமரிப்பு துறை ரூ 1500 என்பதை 4,000 ஆக உயர்த்த வேண்டும். ரயில் கட்டணம் சலுகை போல அரசு போக்குவரத்து குளிர் சாதன பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் நான்கில் ஒரு பங்கு சலுகை கட்டணத்தில் மாநிலம் முழுவதும் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் வீடு இல்லாத தகுதி உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் மேற்கண்ட தீர்மானங்கள் பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.