By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
அரியலூர்மாவட்டம்

கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்

Last updated: October 3, 2024 8:53 am
October 3, 2024
91 Views
Share
SHARE

அரியலூர், அக்;03

 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், குலமாணிக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்

பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார்.

 

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் என ஆண்டிற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், திருமானூர் ஒன்றியம், குலமாணிக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  கலந்துகொண்டார்.

 

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், 2024-25 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணி விவரம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டம் மற்றும் முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களின் தற்போதைய நிலைகள் குறித்தும், சுகாதாரத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் பயன்பெறுவது குறித்தும் எடுத்துரைக்கபட்டது. கிராம ஊராட்சிகளில் நிர்வாகத்;தில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்பதே கிராம சபையின் நோக்கமாகும். மாற்றுத்திறனாளிகளின் கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகள் எவரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணிகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கால்வாய் தூர்வாருதல், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற முக்கியமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே கிராம சபைக் கூட்டங்களின் வாயிலாக பொதுமக்கள் கிராமத்தின் தேவைகளை முடிவு செய்து அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அறிவுறுத்தினார்.

 

முன்னதாக எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில், அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

 

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா, அரியலூர்  வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, திருமானூர் ஒன்றியக் குழுத்தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, வட்டாட்சியர் முத்துலெட்சுமி, குலமாணிக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் பட்டு ஜெயசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

பெரியார் 147வது பிறந்தநாள்; தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
தமிழக மீனவர்கள் கைது
பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்
சங்கரன்கோவில் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி
மதுரை மாமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது; குண்டேரி பள்ளம் அணையும் நிரம்பியது

October 22, 2025
54 Views
குமரியில் 33 பேர் குண்டர் சட்டத்தில் கைது; மேலும் பல ரவுடிகள் கைதாக வாய்ப்பு
குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
சாமல்பட்டி ரயில்வே நிலையத்தில் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்துவைத்தார்.
மகாராஷ்டிரா மாநில பாதயாத்திரை குழுவினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account