நாகர்கோவில் – செப்- 28,
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கிய சுபா, சுபி ரோஸ் கேத்தரின் இவர்களின் கணவர்கள் சகாய செல்சோ ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இவர்கள் மீன்பிடி தொழிலாளிகள் இவர்கள் இருவரும் வளைகுடா நாடான பகரின் நாட்டில் பல ஆண்டுகளாக தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
இரண்டு வருடங்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்த சகாய செல்சோ ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இருவரும் மீண்டும் பகரின் சென்றனர் அங்கு ஏற்கனவே பணி செய்து வந்த பகரின் நாட்டுப் படகு உரிமையாளர் மஜீத் என்பவரிடம் மீண்டும் பணிக்கு சேர்ந்தனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி மீன்பிடிப்பதற்காக பிஹெச் 9102 என்ற பதிவு என் கொண்ட சிறு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர் இதற்காக பகரின் நாட்டின் அரசிடம் இருந்து உரிய அனுமதி பெற்று இருந்தனர் கடலில் மீன் பிடித்து விட்டு இவர்கள் இரண்டு நாட்களில் கரை திரும்புவது வழக்கம் கரை திரும்பியவுடன் ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு போன் செய்வதும் வழக்கம்.
வழக்கம்போல் இரண்டு நாளில் கரை விரும்பி குடும்பத்தினருக்கு போன் செய்ய வேண்டியவர்கள் போன் செய்யவில்லை எனவே இது பற்றி மீனவர்களின் குடும்பத்தினர் பகரின் நாட்டில் உள்ள அவர்களது நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். இதில் கடலுக்கு சென்ற மீனவர்கள் சகாய செல்சோ, ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இருவரும் கரை திரும்பாதது தெரியவந்தது எனவே மீனவர்களின் குடும்பத்தினர் இது தொடர்பாக பகரின் நாட்டில் போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறதா ? என்று விசாரித்துள்ளனர் அப்போது பகரின் நாட்டு படகு உரிமையாளர் மஜீத் அங்குள்ள போலீசில் தனது படகு காணாமல் போய்விட்டதாக மட்டும் புகார் செய்திருப்பது தெரிய வந்தது . அந்த புகாரில் படகில் சென்ற மீனவர்கள் சகாய செல்சோ ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இருவரை பற்றியும் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிந்து கொண்டனர்
எனவே மீனவர்களின் குடும்பத்தினர் இது பற்றி பகரின்ல் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விவரம் சேகரித்து தருமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கோரிக்கை விடுத்தனர் இது தொடர்பாக மாநில அரசுக்கும் மனு கொடுத்துள்ளனர் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் குடும்பத்தினருக்கு தெரிய வைக்கப்படவில்லை மீனவர்கள் சகாய செல்சு ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இருவரின் மனைவியரும் அவர்களின் குழந்தைகளும் பதிலளித்து வருகிறார்கள் மீனவர் சகாய செல்சுவுக்கு எட்டு மற்றும் ஐந்து வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் 6 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர் இருவரின் மனைவியரும் குடும்பத் தலைவர்களை காணாது வாழ்க்கை நடத்த வழியின்றி தவித்து வருகின்றனர்.
பக்ரின் நாட்டிற்கு பணிக்குச் சென்ற மீனவர்கள் இருவருமே உரிய அனுமதி பெற்று சென்றுள்ளனர் விசா காலம் முடிந்ததும் அவர்கள் ஊர் திரும்பி இருக்க வேண்டும் இதனை அந்த நாட்டு அரசு குடியுரிமை அதிகாரிகள் நிறைவேற்றி இருக்க வேண்டும் பகரின் நாட்டிற்கு செல்ல மீனவர்கள் அங்கு பனிக்காலம் முடிந்ததும் இந்தியா திரும்பியதை இங்குள்ள அரசு உறுதி செய்திருக்க வேண்டும் ஆனால் பகிரின் நாட்டு அரசு அதிகாரிகள் அங்கிருந்து மீனவர்கள் இந்தியா திரும்பிவிட்டதை உறுதி செய்யவில்லை எனவே மத்திய மாநில அரசுகள் இப் பிரச்சனையில் தலையிட்டு பகரின் கடலில் மாயமான கடியப்பட்டணம் மீனவர்கள் சகாய செல்சு ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இருவரும் என்ன ஆனார்கள் ? என்பதை கண்டுபிடித்து தெரிவிக்க வேண்டும் இதற்கு மாவட்ட நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் பகரின் நாட்டில் மீனவர்கள் சகாய செல்சு ஆன்றனி இருவரும் மீன்பிடி தொழில் செய்து வந்தபோது இவருடன் தொழில் செய்து வந்த இவர்களின் உறவினர் ஒருவருக்கும் இவர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சகாய செல் சோ, ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இருவரும் மாயமாய் இருக்கலாமோ? என்றும் அஞ்சப்படுகிறது . எனவே மாவட்ட நிர்வாகம் பிரச்சனையில் தலையிட்டு பகரின் கடலில் மாயமான கடியப்பட்டணம் மீனவர்கள் சகாய செல் சோ, ஆண்டனி ஜார்ஜ் இருவரையும் மீட்டு தர வேண்டும் என்று அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.