தேனி செப் 25:
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் 319 மனுக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் மொத்தம் 319 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் மேலும் கலை பண்பாட்டு துறையின் சார்பில் திருமண நிதி உதவியாக ரூபாய் 5000 ஒரு நபருக்கும் கல்வி நிதியுதவி யாகவும் தலா 1500 வீதம் 6 நபர்களுக்கும் தலா 1000 வீதம் 3 நபர்களுக்கும் என்று மொத்தம் 14 நபர்களுக்கு 96000 க்கான காசோலைகளையும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 13200 மதிப்பிலான டெய்சி பிளே யரினையும் மாவட்ட ஆட்சி த்தலைவர் ப
வழங்கினார் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா .ஜெயபாரதி தனித் துணை ஆட்சியர் முரளி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி செய்திருந்தார்