திருப்பூர் செப்டம்பர்.12
கணியம் பூண்டி வஞ்சிபாளையம் ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பூர் குடிமை பொருள் வழங்கள் துறைக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை அடுத்து இன்ஸ்பெக்டர் துளசி மணி
சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் பொன் குணசேகரன் மற்றும் போலீசார் முருகம்பாளையம் ஆலமர விநாயகர் கோவில் அருகே நேற்று வாகன சோதனை நடத்தினார்கள் அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேணுக்குல் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் அங்கேரி பாளையத்தை அடுத்து செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாரதி வயது. 24 என்பதும் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இது தொடர்பாக பாரதியை கைது செய்து 2300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.