ஈரோடு செப் 3
ஈரோடு மாவட்ட
ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டி என் பி சி தேர்வு நடக்க உள்ளது பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வேளாண்மைத்துறை, நில அளவைகள் பதிவேடு துறை போன்ற பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை வரை தொழில் அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், தொழில்நுட்பவியலாளர், அளவர் உள்ளிட்ட 861 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டயம் தொழிற்பயிற்சி டிப்ளமோ ஐ டி இ நிலை முடித்திருக்க வேண்டும். தாள்-1-க்கான தேர்வு 09.11.2024 அன்றும் தாள்-2-க்கான தேர்வு 11.11.2024 முதல் 14.11.2024 வரையும் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2024 ஆகும்.
இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள் வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட டி என் பி சி குரூப் 2 குரூப் 4 டெட் ஆகிய பயிற்சி வகுப்புகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், ஆதார்எண், புகைப்படம் இரண்டு, ஆகியவற்றுடன் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற தொலை பேசியினை தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


