சேலம் சாமிநாதபுரத்தில் உள்ள அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் 41 ஆம் ஆண்டு பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முனைவர் அருள் செல்வம் ராயப்பன் தலைமை தாங்கினார். இதில் துணை ஆயர் மைக்கேல் ராஜ் செல்வம் கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். அரிசி பாளையம் உதவி பங்கு தந்தை ஜான் சத்தியசீலன் மற்றும் புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இதில் பங்கு அருட் பணியாளர்கள், ஆரோக்கியா அன்னை ஆலய நிர்வாக குழு ,விழா குழு மற்றும் அன்னையின் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



