நாகர்கோவில் ஆக19
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோயில்களை குறி வைத்து சேதப்படுத்தும் கும்பல் அதிகரித்துள்ளது. இதுபோல் ஒரு சம்பவம் நேற்று இரவு ராஜாக்கமங்கலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எறும்புக்காடு ஜங்ஷன் அடுத்த பருத்திவிளை, புல்லுவிளை ஊர் பொதுமக்களின் காவல் தெய்வமான சுடலைமாடசாமி திருக்கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் உள்ள பெயர் பலகை, கல்வெட்டுகள் உடைத்து சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் கலையரங்கம், கோவில் சமையலறை, அலுவலகம், சமுதாய நலக்கூடம் அனைத்தின் பெயர்களையும் பெயிண்ட் அடித்து பருத்திவிளை பெயரினை நீக்கி உள்ளனர். இதனால் ஊருக்குள் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவர்த்தனம் அங்கு விசாரித்தது போல் குமரி மாவட்டத்திலும் விசாரித்து மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பாக ஊர் தலைவர் ஜெகன் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பல கட்ட போராட்டங்கள் ஊர் மக்கள் சார்பாக நடத்தப்படும் என ஊர் தலைவர் ஜெகன் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.