சோழவந்தான்,
ஆக.12-
மதுரை மாவட்டம்
சோழவந்தான் பேரூராட்சியில் தமிழக அரசின் மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தில் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் ஆகியோரின் உத்தரவின் பேரில் சோழவந்தான் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து முக்கிய தூய்மை பணியாக தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து 8 வது வார்டு 46 எண் ரோட்டில் ஒட்டுமொத்த தூய்மைப் பணியாக மழை நீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொண்டனர். மேலும் இந்தப் பணியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியானது பேரூராட்சி தலைவர் ஜெயராமன் செயல் அலுவலர் செல்வகுமார், துப்புரவு ஆய்வாளர் சூரியகுமார் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.