தென்காசி ஏப்5
தென்காசி மாவட்ட விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன தற்போது 2024 -2025 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் பருவத்தில் சன்னரக நெல் கிலோ ரூ.24.50 க்கும் பொது ரக நெல் கிலோ ரூபாய் 24.05 க்கும், 32 76 விவசாயிகளிடம் சுமார் 26.275 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது அதற்குரிய தொகையினை நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது தென்காசி மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லை அரசு நிர்ணயித்த விலையில் இடைதரகர்கள் இன்றி ஒருமூடை நெல் 40. 580 கிலோ எடையில் அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.


