By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி நகர முக்கிய கடை வீதிகளில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி நகர முக்கிய கடை வீதிகளில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி நகர முக்கிய கடை வீதிகளில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம்

Last updated: April 20, 2026 5:56 pm
April 20, 2026
20 Views
Share
SHARE

தென்காசி, ஏப்ரல் 20 –

தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் தென்காசி நகர முக்கிய கடை வீதிகள், சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், தெற்கு ரதவீதி, வடக்கு ரத வீதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி திமுக தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவருடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உடன் சென்று கடை வீதிகளில் பிரச்சாரம் செய்தனர். இறுதியாக தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் ஆலய பகுதியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்த உடன் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திலிருந்து ரூ.2000 ஆக, புதுமைப்பெண் திட்டம் ரூ.1000 திலிருந்து ரூ.1500 ஆக, தமிழ் புதல்வன் திட்டம் ரூ.1000 திருந்து ரூ.1500 ஆக, முதியோர் உதவித்தொகை ரூ.1200 லிருந்து ரூ.2000 ஆக, மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.1500 லிருந்து ரூ. 2500 ஆக, நெல் கொள்முதல் ரூ.2500 ல் இருந்து ரூ.3500 ஆக, தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் ரூ.1200 திலிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் நூற்றுக்கணக்கான கோவில்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. அதே போல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இன்னும் நூற்றுக்கணக்கான கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இரண்டு தேர்களில் ஒரு தேர் இயங்கவில்லை என்று என்னிடம் கூறினார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தேர் சரி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு தேரோட்டத்தில் இரண்டு தேர்களும் ஓடும் என்று வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தில் தெருக்களின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை
நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
ஈரோடு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்
குமரி வாக்களிப்பதிலும் முதன்மை மாவட்டமாக திகழ கலெக்டர், பொதுமக்கள் கலந்துரையாடல்
மொடக்குறிச்சியில் 19ந் தேதி அமித்ஷா பிரசாரம்: ஈரோட்டில் நயினார் நாகேந்திரன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மகளிர் மேம்பாட்டு திறன்சுய தொழில் பயிற்சி

July 17, 2024
141 Views
குமரி மாவட்ட பாரதிய ஜனதாவிலிருந்து 8 பேர் நீக்கம்: மேலும் பலரை நீக்க திட்டம்
முதல் அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள்
திண்டுக்கல் மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025-26 பரிசளிப்பு விழா
கன்னியாகுமரி நெடுஞ்சாலை செப்பனிட 14.87 கோடி ஒதுக்கீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account