திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் திமுகவினரால் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை கூரைநாட்டில் துவங்கி முக்கிய வீதி வழியாக தலைமை தபால் நிலையம் வந்தடைந்தனர். அங்கு அலங்கத்து வைத்திருந்த கலைஞரின் திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் திருக்கடையூர், செம்பனார்கோவில், மூவலூர், மங்கைநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைதி பேரணியாக சென்று கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், மத்திய கிழக்கு ஒன்றிய செயலாளர் அமிர்த.விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் அப்துல் மாலிக், மங்கைசங்கர், மூர்த்தி, ஒன்றிய துணை பெருந்தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி சிவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கலைஞரின் திருவருடத்திற்கு மரியாதை செலுத்தினர்.



