By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: November 23, 2024 12:47 pm
November 23, 2024
53 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 23

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆர்,அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.

நவம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அணைகளில் நீர்நிலை மற்றும் மழை விபரங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இன்றைய சூழலில் பாரம்பரிய நெல் இரகங்களின் முக்கியத்துவம் மற்றும் தேவை குறித்து திருப்பதிசாரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வேளாண் ஆராய்ச்சியாளரால் விவசாயிகளுக்கு காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 186 மனுக்களுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.

 

விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் நீர்வளத்துறை மூலம் சானல்களில் தண்ணீர் வரத்து மற்றும் குளங்களை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. தோவாளை சானல் உடைப்பினால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் பயிர் இழப்பீடு கணக்கிடும்போது கிராம வாரியாக கணக்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தார்கள். இது தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் ஆட்சித்தலைவர்  தெரிவித்தார். 

குளங்களில் மீன் வளர்ப்பது மற்றும் கழிவுகளை கொட்டி குளங்களை மாசுபடுத்துவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மாவட்டத்தில் ஏதேனும் 3 குளங்களில் நீர் மாதிரி எடுத்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் செய்யப்படும் பரிசோதனை முடிவுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.

 

வனவிலங்குகளால் பயிர் மற்றும் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க மாவட்ட வன அலுவலர் மூலம் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இரண்டு வருவாய் கோட்டங்களிலும் மாதந்தோறும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் தொடர்பான கூட்டம் இடைவெளியின்றி தவறாமல் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். மேலும் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை கண்காணித்து அதனை தடுப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மாவட்ட நகர்ப்புற ஊரமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

 

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் அரங்கினை பார்வையிட்டார்கள். தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பில் ஜேக் மிஷன் திட்டத்தின் கீழ் வியட்நாம் சூப்பர் எர்லி மற்றும் டேங்சூரியா பலா வகைகளின் ஒட்டுவகை தொகுப்பினை 2 பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

 

நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா. நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை
கோவை எஸ்.எஸ். குளம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் இலவச சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு திறப்பு
ஸ்ரீ மருதபவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
துறையூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

ஒக்கலிக கவுடர் நலச் சங்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

July 14, 2025
42 Views
தருமபுரி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
மகாளய அமாவாசையை முன்னிட்டு முதாதையர்களுக்கு பாலாற்றில் தர்ப்பணம்
குலமங்கலத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்
குமரி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் நற்பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account