இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், கீழச்சோத்தூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்றுவரும் மாணவ, மாணவிகள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வகையில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், திறந்து வைத்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.



