சாதனை மாணவர்களை உருவாக்கி வரும் உயரிய விருதுகள் பெற்ற ஆசிரியர்கள் உள்ள தொண்டி மேற்கு தொடக்க பள்ளிக்கு கட்டடம் மற்றும் மைதானம் வசதி வேண்டும்
தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா முதலமைச்சருக்குகோரிக்கை மனு
ராமநாதபுரம், ஜுலை 19-
தொண்டியில் பழமை வாய்ந்த மிகவும் பிரபலமான பல சாதனை மாணவ மாணவிகள் உருவாக்கி வரும் மற்றும் பல விருதுகளை பெற்ற தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ள தொண்டி மேற்கு தொடக்க பள்ளியில் பாழடைந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டி தந்து சாதனை மாணவர்கள் மேலும் சாதனை புரிய போதிய அளவு விளையாட்டு மைதானம் உருவாக்கி தர தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் தனி பிரிவுக்கும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் சமூக ஆர்வலரும் தமுமுகவின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா கோரிக்கை மனு அனுப்ப உள்ளார்.
அவர் அனுப்பி உள்ளகோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா தொண்டி பேரூராட்சி தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளி 1938ம் வருடம் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 240க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி இரண்டு கட்டிடங்களில் ஏழு ஆசிரியர்களை கொண்டு இயங்கி வருகிறது. இப்பள்ளி சமீப காலமாக சிறந்த ஆசிரியர்களை கொண்டு தரமான முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தொண்டியை சேர்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்ப்பதற்கு மிகவும் ஆர்வத்தோடு இருக்கின்றனர்.
பள்ளி சுற்றுச்சுவர், கேமரா ,மூலிகை செடி ,சுத்தமான குடிநீர், தூய்மையான கழிப்பறை, தரமான கல்வியும் இப்பள்ளியில் கொடுப்பதால் மாநில அரசு இப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாநில புரோஸ்கார் விருதும் மாநில நல்லாசிரியர் விருதும் மாவட்ட மற்றும் தேசிய விருதுகளும் இப்பள்ளி ஆசிரியருக்கு கிடைத்தது குறிப்பிட தக்கது. அரசு பள்ளிகளில் அசத்தும் பள்ளியாக பராமரித்து வரும் இப்பள்ளியில் உள்ள ஆசிரியைகள்
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று கோப்பைகள், பதக்கங்கள், விருதுகள் பெற்று அசத்தி வருகிறார்கள்.
கல்வி அதிகாரிகளும் பொதுமக்களும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் இப்பள்ளி ஆசிரியர்களையும் மாணவ மாணவிகளையும் பாராட்டி புகழ்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இப்பள்ளியின் மாணவர்களின் பெற்றோர்கள் இப்பள்ளிக்கு போதிய கட்டிட வசதி இல்லாத நிலை அறிந்து வேதனை அடைகிறனர். மேலும் சாதனை புரியும் மாணவ மாணவிகளுக்கு விளையாடுவதற்கு வசதியான இடமில்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
அத்துடன் இப்பள்ளி அருகே பராமரிப்பு இல்லாத பாழடைந்த கட்டிடம் ஒன்று இருக்கின்றது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு இப்பகுதி மக்கள் பயன்பெறுவதற்கு வசதியாக போர்க்கால அடிப்படையில் பராமரிப்பில்லாத பாழடைந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கருணையோடு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் இப்பள்ளிக்கு பள்ளி மாணவர்கள் சிறிது நேரம் விளையாடுவதற்கும் தகுந்த இடம் ஒதுக்கி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொண்டி வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கோரிக்கையை அன்போடு ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.