நாகர்கோவில் ஜூலை 13
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சுதந்திர இந்தியாவில் பசு பாதுகாவலர் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை குறி வைத்து படுகொலை செய்துவரும் பாசிச சங்பரிவார் கும்பலை கண்டித்து எஸ் டி பி ஐ மாவட்டத் தலைவர் சர்தார் அலி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்தியாவில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்வதை பாசிச சங்க பரிகார கும்பல்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மீண்டும் மோடி ஆட்சி ஏற்ற பிறகு கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஆறுக்கும் அதிகமான நபர்கள் இந்த கும்பல்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா வன்மையாக கண்டிப்பதோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்தியில் மாநிலத்தில் ஆளுகின்ற அரசை வலியுறுத்தி தேசம் தழுவி அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சமீப காலமாக மத வெறுப்பின் மூலமாகவும் மதவெறிப் பிரச்சாரங்கள் மூலமாகவும் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருவதை அடுத்து உற்சாகமடைந்த தொண்டர்கள் சங்க பரிவார கும்பல்கள் அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி கும்பலாக சேர்ந்து அடித்து படுகொலை செய்கிறது. கொலையாளிகள் குறித்த முழுமையான ஆதாரங்கள் இருந்தும் இலகுவாக ஜாமீனில் வெளிவந்து விடுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு காவல்துறை மூலம் வழக்குப்பதிந்து கடுமையான சிரமத்துக்குள் ஆளாக்கப்படுகின்றார்கள். காவல்துறையும் கும்பல் கொலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பதும் பாசிச அரசும் இத்தகைய கும்பல்களுக்கு ஆதரவளிப்பதும் இந்தியாவினுடைய ஒற்றுமைக்கும் சட்ட ஒழுங்கிற்கும் எதிரான சூழ்நிலை உருவாகிறது. இத்தகைய செயலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்
முகைதீன் நாகூர் மீரான், வரவேற்புரையாற்றினார்.
வர்த்தக அணி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் மணவை சாதிக் அலி, பச்சை தமிழகம் நிறுவனர் உதயகுமார், மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.
மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சாலீம் நன்றியுரையாற்றினார். மாவட்ட செயலாளர் நாஞ்சில் செய்யதலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.