நாகர்கோவில் ஜூலை 13
நாடு முழுவதும் கடந்த மாதம் மழை மற்றும் வெயில் என பருவநிலை மாறுபாடு ஏற்பட்டதால் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இருந்தாலும் இந்த மாதத்தில் தொடக்கத்தில் காய்கறிகளின் விலை சாதாரண நிலைக்கு வந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று முதல் காய்கறிகளின் விலை சந்தைகளில் அதிகரித்துள்ளது நாகர்கோவில் காய்கறி சந்தைகளில் காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ரூ 65 க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் ₹80 ரூபாயாகவும் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழைக்காய் 50 ரூபாயாகவும், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வழுதலங்காய் 85 ரூபாயாகவும், வெண்டைக்காய் ரூபாய் 50 பதிலிருந்து 65 ரூபாயாகவும், கேரட் 80 லிருந்து 110 ரூபாயாகவும், பீட்ரூட் 50 லிருந்து 80 ரூபாயுமாக இப்படி அனைத்து காய்கறிகளும் சராசரி 30 ரூபாய் உயர்ந்துள்ளது. நீலகிரி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகள் தான் குமரி மாவட்டத்திற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கிருந்து கொண்டுவரப்படும் காய்கறிகளின் வரத்து குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் – நாகர்கோவிலில் காய்கறி சந்தைகளில் காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொது மக்கள் சந்தைக்கு வருவதும் கணிசமாக குறைத்து உள்ளது.