தஞ்சாவூர் ஜூலை 6
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன் இந்திய மாணவர் சங்கத்தினர் நீட் யுஜிசி நெட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகளை செய்யும் தேசிய தேர்வு முகமையை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலை வர் அர்ஜுன் தலைமை தாங்கினார் சங்கத்தின் மாநில செயலர் அரவி ந்தசாமி கண்டன உரையாற்றி னார். மாவட்டசெயலர் சந்துரு, மாவட்ட குழு உறுப்பினர் எடிசன், கிளை தலைவர் பிரேம்குமார், தலைவர் ரஞ்சித், கிளை நிர்வாகி கள் சரோஜினி, நேஹா , பிரியா அஸ்வின், ஹரிஷ் ,ரமணா, திலீப் வீரராஜ், வசந்த், ஜோஷ்வா, ஹரிஷ் தரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்