சேலம் மனித உரிமைகள் கழகம் சார்பில் கோட்டை மைதானத்தில் கழக பொருளாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் அமைப்பு செயலாளர் விக்கி என்கிற விக்னேஷ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி 59 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. பொது மக்களுக்கு மதுவின் மீது போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் கள்ள சாராய கலாச்சாரத்தை தடுக்காமல் இருக்கின்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், அதை ஊக்குவிக்கின்ற ஒரு சில அரசியல் பின்புலத்தையும் மனித உரிமைகள் கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம் என கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் இணைப்பொது செயலாளர் பார்த்திபன், துணைப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், சர்வதேச உரிமைகள் கழகத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



