தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 108 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 63 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், 4 தனியார் பள்ளிகள், என 177 பள்ளிகளைச் சேர்ந்த 9, 365 மாணவர்களும், 9,971 மாணவிகளும், 177 பள்ளிகளைச் சேர்ந்த 19, 336 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பம் செய்தனர். மொழிபாடமான தமிழ் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 19,336 பேர் விண்ணப்ப செய்திருந்ததில், 538 பேர் தேர்வு எழுத வரவில்லை. 18, 798 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 83 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ் 2 அரசு பொது தேர்வுவை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.இந்த பிளஸ் 2 தேர்வு வரும் 24 – ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8,500 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகள் இந்த தேர்வை உண்மையாகவும், நேர்மையாகவும், இவ்வித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் எளிமையாக மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். எந்தவித தவறும் ஏற்படாத வண்ணம் சிறப்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளை ஈடுபடுவர்களை பிடிக்க பறக்கும் படை தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என 3,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களும், ஆசிரியர்களும் தேர்வு அறைக்குள் செல்போன் உள்பட மின் சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தமிழ் பொது தேர்வு வினாத்தாள் எதிர்பார்த்ததை விட எளிமையாக இருந்தது. படித்துப் பார்க்கும்போது எளிதில் புரியும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் தமிழ் தேர்வை நன்றாக எழுதி இருக்கின்றோம். நல்ல மதிப்பெண்களும் கிடைக்கும் என்று பள்ளியின் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.



